அஸ்வின் குமாரை நம்பும் பிரபு சாலமன்: 'செம்பி' 2வது டிரெய்லர் வெளியீடு!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
செம்பி 2வது டிரெய்லர் வெளியீடு
செம்பி 2வது டிரெய்லர் வெளியீடு
Published on
Updated on
1 min read

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செம்பி’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அஸ்வின் குமார் இதில் நாயகனாக நடிக்க, கோவை சரளா, தம்பி ராமையா, நிலா என்ற சிறுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பிரபு சாலமன் படங்களுக்கு டி.இமான் வழக்கமாக இசையமைத்து வந்த நிலையில், செம்பி படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். 

சென்பி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு பாடல்களையும் பிரபு சாலமன் எழுதியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அஸ்வின் குமாரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து படத்தை எடுத்துள்ளார். 

'என்ன சொல்ல போகிறாய்' படத்தின்  நிகழ்ச்சியில் அஸ்வின் குமார் பேசியது பலவிமர்சனங்களுக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து அவரின் மார்க்கெட் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். எனினும் கதைக்கு பொருத்தமானவர்களை நடிக்க வைப்பதில் கைதேர்ந்தவரான பிரபுசாலமன் தற்போது அஸ்வினை நம்பி செம்பி படத்தில் களமிறக்கியுள்ளார். 

இந்த படத்தின் முதல் டிரெய்லர் ஜூன் மாதம் வெளியானது. தற்போது இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.