திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் குவைத், மலேசியா, கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:51 pm IST

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படம் நாளை (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் குவைத், மலேசியா, கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த கருத்துகள் இருப்பதால் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.