'5 ஆண்டு காதல்... முதன்முறையாக சந்தித்தது...': குக் வித் கோமாளி புகழின் காதல் கதை
விஜய் டிவி புகழ் கடந்த மாதம் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர். லவ் யூ என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து புகழ் இந்தப் பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் புகழ் இதுகுறித்து மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அவரிடம், ஸ்ருதிகா உங்கள் காதலி மிக அழகாக இருக்கிறார் என்று சொல்ல, போட்டியின் வெங்கடேஷ் பட் புகழிடம் காதல் கதையைக் கேட்டார்.
அவருக்கு பதிலளித்த புகழ், அவரது பெயர் பென்ஸ் ரியா. 5 வருடங்களுக்கு முன் கோவையில் சந்தித்தோம். பவித்ரா, தர்ஷாவிடம் பேசும்போது எனக்கு அவர் முழு ஆதரவு அளித்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.