/

'வலிமை' படம் பார்த்த அஜித்: இயக்குநர் வினோத்திடம் இப்படி சொன்னாராம்: வெளியான தகவல்

வலிமை படம் பார்த்த அஜித் இயக்குநர் வினோத்திடம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:28 am

DIN

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நிறைய இடங்களில் முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. 

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகவிருக்கும் நடிகர் அஜித் படம் என்பதால் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தின் ப்ரமோ விடியோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வலிமை படம் பார்த்த நடிகர் அஜித் இயக்குநர் வினோத்திடம், தனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துவிட்டதாகவும், இந்தப் படத்தில் நடித்ததற்கு மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர்களுக்கு இந்தப் படத்தைக் காண்பிக்கப்போவதாகவும் வினோத்திடம் கூறினாராம். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.