கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஷ்மிகாவுடன் திருமணம் என வெளியான செய்தி உண்மையா?: பதிலளித்த விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகாவுடன் காதல் என பரவிய செய்திக்கு முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார். 

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:32 am

DIN

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் தகவல் பரவி வருகின்றன. மேலும் அவர்கள் அடிக்கடி சந்த்தித்துக்கொள்வதாகவும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக வட இந்திய பத்திரிகைகள் இருவருக்கும் திருமணம் என செய்திகள் வெளியிட்டன. 

இதனையடுத்து விஜய் தேவரகொண்ட இதனை முட்டாள்தனம் என மறுத்துள்ளார். தற்போது லைகர் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் தேவரகொண்டா  மும்பையில் இருக்கிறார். ராஷ்மிகாவும் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடிக்கும் மிஷன் மஜ்னு படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறாராம். 

புத்தாண்டின்போது இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படம் வெளியிட இருவரும் கோவாவில் உள்ள விடுதியில் ஒன்றாக இருப்பதாக செய்திகள் பரவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.