கன்னட நடிகை காவல்துறையில் புகார்: 4வது திருமணம்தான் காரணமா?
நடிகை பவித்ரா லோகேஷ் தன்னை சில மீடியா நபர்கள் பின்தொடர்வதாக காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளார்.


நடிகை பவித்ரா லோகேஷ் தன்னை சில மீடியா நபர்கள் பின்தொடர்வதாக காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளார்.
பவித்ரா லோகேஷ் சின்னத்திரை நடிகை. மேலும் தமிழ், கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கன்னட மாநில விருதினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வீட்ல விசேஷம் என்னும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இவரது கணவர் சுசேந்திர பிரசாத் சகோதரர் ஆதி லோகேஷ் கன்னடத்தில் பிரபலமான நடிகர்கள்.
இவர் தற்போது நரேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நரேஷ்க்கு 4வது திருமணம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது. இவரின் 3வது மனைவி ரம்யாவுக்கும் இவருக்கும் பிரச்சைனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பவித்ரா அவர்களை 4வது திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
பவித்ராவின் நட்பிற்குப் பிறகு தான் கவலையில் இருந்து மீண்டதாகவும், பவித்ரா அவர்கள் தனக்கு நண்பனாகவும், வாழக்கைத் தோழராகவும், தத்துவவாதியாகவும், நலம் விரும்பியாகவும் இருக்கிறார் என நரேஷ் கூறியுள்ளார்.
சமீப காலமாக தன்னை யாரோ சில பத்திரிக்கைத் துறையினர் பின்தொடர்வதாகவும் அதனால் மனநிம்மதியை இழந்து விட்டதாகவும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, இவர் சைபர் கிரைமில் தன்னுடைய பெயரில் போலியான கணக்குகள் இருப்பதாக புகாரளித்தும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நரேஷை திருமணம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய தனிப்பட்ட விசயத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை. அதை அவரே பார்த்துக்கொள்வார் என பவித்ரா லோகேஷ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...