தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் சாதனை படைத்த விக்ரம்

கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் கண்ட படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. 

News image
Updated On :13 ஜூலை 2022, 8:19 am

DIN

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் முதல் வார இறுதியில் அதிகம் பேர் பார்த்த படம் என்கிற புதிய சாதனையை விக்ரம் படம் நிகழ்த்தியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. 11 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை அள்ளியது. தற்போது உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் கண்ட படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் விக்ரம் படத்தின் வசூல் ரூ. 150 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அதிக வசூலை அள்ளிய படமாக தமிழில் டப் செய்யப்பட்ட கன்னடப் படமான கேஜிஎஃப் 2 இருந்தது. அதன் வசூலை விக்ரம் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில் கடந்த வாரம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் விக்ரம் படம் வெளியானது. இதையடுத்து ஓடிடி வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார இறுதியில் அதிகம் பேர் பார்த்த படம், அதிக சந்தாதாரர்கள், அதிக நேரம் பார்த்தது என மூன்று சாதனைகளை விக்ரம் படம் படைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.