/

பா.ரஞ்சித் - வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'விக்டிம்ஸ்' டிரெய்லர்

பா.ரஞ்சித், வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் இயக்கத்தில் உருவான விக்டிம்ஸ் டிரெய்லர் வெளியானது.   

News image
Updated On :19 ஜூலை 2022, 1:54 pm IST

பா.ரஞ்சித், வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் இயக்கத்தில் உருவான விக்டிம்ஸ் டிரெய்லர் வெளியானது.  

ஆன்தாலஜி எனப்படும் பிரபல இயக்குநர்களின் இயக்கும் குறும்படங்களின் தொகுப்பு கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஒரே கருத்தியல் ரீதியான குறும்படங்களை இயக்குநர்கள் இயக்குவர். 

அந்த வகையில் சிம்பு தேவன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ்.எம் இயக்கிய படங்கள் விக்டிம்ஸ் என்ற பெயரில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளன. இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்செஸ் ஃபிலிம் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

இந்தப் படத்தில் நாசர், தம்பி ராமையா, நட்டி, பிரயா பவானி ஷங்கர், கலையரசன், குரு சோமசுந்தரம், பிரசன்னா, அமலா பால், கிரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு பி.சரவணன், சக்தி சரவணன், தமிழ் ஏ அழகன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாம் சிஎஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.