சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

''இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ரஹ்மான்தான் காரணம்'' - யுவன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சம்பவம்

துபை எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ரஹ்மானே காரணம் என யுவன் தெரிவித்தார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:47 pm

DIN

துபை எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ரஹ்மானே காரணம் என யுவன் தெரிவித்தார். 

துபை எக்ஸ்போ நிகழ்ச்சியில் இளையராஜா, ரஹ்மான், யுவன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்றார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் துபை எக்ஸ்போ நிகழ்ச்சி பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாங்கள் அங்கே இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். என் ஊரில் இருக்கும் இசைக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்த நீங்கள் ஒத்துக்கொண்டால் நான் வந்து இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரஹ்மான் சொன்னார். 

மேலும் நீங்கள் ஷகிரா போன்ற இசைக் கலைஞர்களை அழைத்து வருகிறீர்கள். எங்கள் ஊரிலும் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். என்  அப்பா (இளையராஜா) பெயர், என் பெயரை, அனிருத் பெயரை ரஹ்மான்தான் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு எக்ஸ்போ சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.