மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஜினிகாந்த் படம் குறித்த அறிவிப்பு? சன் பிக்சர்ஸ் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

புதிய அறிவிப்பு நாளை (ஜுன் 17) காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :16 ஜூன் 2022, 1:37 pm

DIN

புதிய அறிவிப்பு நாளை (ஜுன் 17) காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 169 எனப் பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் வந்ததால், தலைவர் 169 பட இயக்குநர் மாற்றப்படுவார் என்ற தகவல் பரவியது. 

ஆனால் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அந்த தகவலை பொய்யாக்கினார். மேலும் கடந்த சில நாட்களாக இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதவிருப்பதாக தகவல் ஒன்று பரவிவருகிறது. 

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது புதிய அறிவிப்பு நாளை (ஜுன் 17) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது தலைவர் 169 பட அறிவிப்பாக இருக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பு உண்மையாக இருக்குமா என்பது நாளை காலை தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.