மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வரலாற்று படமாக உருவாகிறதா மாமன்னன்? : உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியின் பிரம்மாண்ட படத்தின் நடிகர்கள் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :4 மார்ச் 2022, 5:53 am

DIN

உதயநிதி ஸ்டாலின் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் ஆர்டிக்கிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு மாமன்னன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். 

Story image

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்தத் தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மாமன்னன் தலைப்பு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் காளை மாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.