''கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்'': பிரபத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

கருத்து வேறுபாடு கராணமாக தனுஷ் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக பரபலத்தின் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
''கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்'': பிரபத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் நடிக்க, ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக் வசனம், திரைக்கதை எழுதியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தத் தகவலை மறுத்துள்ளார். அவரது பதிவில், ''படத்தின் டிரெய்லர் மற்றும் வசனங்களுக்கு கிடைக்கும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் நிறைய பேர் சொன்னதுபோல மாறன் கமர்ஷியலான, உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். 

உங்களுக்கு சமமாக நானும் இந்தப் படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அந்த வசனங்கள் என்னுடையவை அல்ல. உங்கள் புகழ் எல்லாம் வசனம் எழுதியவரையே சாரும். 

கருத்து வேறுபாடு காரணமாக மாறன் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். என் முடிவை ஏற்றுக்கொண்ட படக்குழுவினருக்கு நன்றி. நான் தற்போது சில இந்திய அளவில் பெரிய படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்து வருகிறேன். மாறன்தான் அதற்கு ஆரம்பப்புள்ளி என்பதை மறக்க மாட்டேன். 

என்னை நம்பிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. ஒரு சிறந்த நடிகரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்ட வகையில் நடிகர் தனுஷிற்கு கடன்பட்டிருக்கிறேன். என்னை நம்பிய இயக்குநர் கார்த்திக் நரேனிற்கு நன்றி. 

சத்யஜோதி ஃபிலிம்ஸின் அன்பறிவு படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். மாறன் படத்தை உங்களுடன் பார்க்க காத்திருக்கிறேன். 

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் இணைவதில் மகிழ்ச்சி. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். தனுஷ் மற்றும் குறிப்பு - என்னுடைய ஊர் சிதம்பரம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com