நீண்ட இடைவேளைக்கு பிறகு பாடல் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார்.
தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
பாடல் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''கடந்த 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் யாத்ராகாரன் என்ற பெயரிலும், தெலுங்கில் சஞ்சாரி என்ற பெயரிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸுடன் இருக்கும் படத்தைபகிர்ந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


