குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரபல ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் சரத்குமார்

பிரபல ஹீரோ படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :24 மார்ச் 2022, 11:58 am

DIN

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். 

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார்.

ஆர்.டி.ராஜசேகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்கிறாராம். 

ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த காஞ்சனா திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ருத்ரன் திரைப்படம் முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.