/

‘எல்லாரும் சமம்னா யார் ராஜாவாகறது? வெளியானது நெஞ்சுக்கு நீதி டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 மே 2022, 7:13 am

DIN

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் தற்போது தமிழில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  'நெஞ்சுக்கு நீதி’ என்கிற தலைப்பில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், வருகிற மே-20 ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ‘எல்லாரும் சமம்னா யாரு ராஜாவாகறது’ போன்ற சில வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஸ்டுடியோஸ், பேவியூ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 

ஆரி, தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, அப்துல் லி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜிஷிண்டே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.