தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சமந்தாவின் ‘யசோதா’: ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்!

சமந்தா நடிப்பில் உருவான ‘யசோதா’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 4:40 am

DIN

சமந்தா நடிப்பில் உருவான ‘யசோதா’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.  

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. படத்தில் சண்டை காட்சிகள் இருப்பதால் இப்படி கிடைத்திருக்குமென ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

மேலும் படத்தின் கால அளவு (ரன்னிங் டைம்) 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.