கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகிழ்ச்சியைக் கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை: பார்த்திபன்

அமேசான் ஓடிடி தளத்தில் ஆர். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் வெளியானது. 

News image
Updated On :12 நவம்பர் 2022, 10:51 am

DIN

பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்தப் படம் இரவின் நிழல். இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் ‘இரவின் நிழல்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்கிற தகவலை ஆர்.பார்த்திபன் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “மகிழ்ச்சியைக் கூட…அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்! தயவு செய்து நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்! நன்றியுடன்” என பதிவிட்டுள்ளார். 

Story image

அவர் தனது முகநூலில், அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்து விடுமென சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கே தெரியாமல் அமேசானில் படம் வெளியாகியுள்ளதை குறித்து இப்படி பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.