மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கார்த்தியின் ‘சர்தார்’: முதல் பாடல் வெளியாவது எப்போது? 

கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் ஏறுமயிலேறி எனும் பாடல் நாளை (அக்.10) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :9 அக்டோபர் 2022, 11:06 am

DIN

கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் ஏறுமயிலேறி எனும் பாடல் நாளை (அக்.10) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பிறகு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள  படம் சர்தார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இந்தப் படம் தீபாவாளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படத்திலிருந்து ‘ஏறுமயிலேறி’ பாடல் நாளை (அக்.10) மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.