பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இறப்பு செய்தி சமூக வலைதளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் தற்போது இந்தியாவில் உள்ளார் மற்றும் சொந்த அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறார். ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது மரணம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர் கூறியதாவது:
உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! எனக்கு தெரிந்ததிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டவள் நீ! எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் முகத்தில் புன்னகையின் மூலம் உன்னுடைய போராட்ட குணத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றீர்கள். உனது குறும்பான பக்கத்தை அறிவேன். உங்கள் பயணத்தில் நீங்கள் ஒவ்வொரு நபரையும், சவாலான சூழ்நிலையையும் தைரியத்துடன் எதிர்கொண்டீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய். உங்களுடன் பயணித்ததை நான் பெருமையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்! உனது ஆன்மா சாந்தியடையட்டும்.
இது மில்லரின் மகள் என சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள்தான் அனே என்றும் அவர் மில்லரின் தீவிரமான ரசிகர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4வது காலாண்டில் ரூ. 64 கோடி லாபம் ஈட்டிய க்வெஸ் கார்ப்!
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


