வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வசூல் சாதனை படைத்துவரும் நிலையில் அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார். சர்தார் படத்தை விஷாலின் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

திமுக ஆட்சியில்தான் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


