தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது, இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வருகிற செப்.11 ஆம் தேதியும் திரைப்படம் செப்.30 ஆம் தேதியும் வெளியாகும் எனத் தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக, இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பு - எஸ்.தாணு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

