நிர்வாணப் படங்களைப் பகிர்ந்த வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது.
அதனைத் தொடந்து, நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரன்வீர் சிங்கின் மீது மும்பை செம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிக்க | 16 வயதினிலே: கிராமத்துக் காதல் ஓவியம்!
இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த ரன்வீர் சிங் தான் பதிவிட்ட புகைப்படங்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை யாரோ நிர்வாணமாக ’மார்பிங்' முறையில் சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
வழக்கு விசாரணை மேலும் நடைபெறும் என்பதால் இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி: சிஎன்ஜி நிலையத்தில் லாரியின் எரிவாயு சிலிண்டா் வெடித்து 3 போ் உயிரிழப்பு: மூவா் போ் படுகாயம்

தமிழா்களின் கல்வெட்டுகளை எளிதாக புரிந்துகொள்ள ஏஐ தரவுத் தளம்: அமைச்சா் ராஜ்மோகன்

அலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை

45 டிஎம்சி நீா் இருப்பு: முதல்வா் ஒப்புதல் பெற்று மேட்டூா் அணை திறக்கப்படும்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



