உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடர் 6 எம்மி விருதுகளை வென்றுள்ளது.
பணத்தேவை உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு குழுவால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. வெல்லும் ஒரு நபருக்கு பல நூறு கோடிகள் பரிசாக அளிக்கப்படும். தோற்கும் வீரர்கள் வீட்டிற்குச் செல்லலாமா? இல்லை. அங்கேயே சுட்டுக்கொல்லப்படுவார்கள். ஒவ்வொரு நிமிடமும் பதற்றமான ஆக்கத்துடன் மொத்தம் 400 வீரர்கள் விளையாடும் கதையே ‘ஸ்குவிட் கேம்’(squid game) இணையத் தொடர்.
இதையும் படிக்க: ‘இளைப்பாறு நண்பா’: வந்தியத் தேவனுக்கு பதிலளித்த ஆதித்த கரிகாலன்
நெட்பிளிக்ஸில் வெளியான இந்த தென் கொரிய தொடர் தற்போதுவரை உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதோடு ரூ.12,000 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனையும் செய்துள்ளது.

லீ ஜங் ஜே
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற டிவி மற்றும் இணைய தொடருக்கான விருதுகளை வழங்கும் ‘எம்மி விருதுகள்’ நிகழ்ச்சியில் மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஸ்குவிட் கேம் தொடருக்கு சிறந்த நடிகர்(லீ ஜங் ஜே) உள்பட 6 விருதுகள் கிடைத்துள்ளது.
முன்னதாக, சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதை சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் ஸ்குவிட் கேமில் நடித்த ஓசங் சோ பெற்றிருந்தார். அவர் நடித்த ’பிளேயர் 001’ என்கிற கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

வியக்க வைக்கும் வெட்டாறு பாலம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் குளிர்ச்சியடைய...
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



