முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே(2002)தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம். பின்னர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது அழகு கூடிக்கொண்டே போனதாக ரசிகர்கள் பாராட்டினர்.
பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய இணையத்தொடர் படப்பிடிப்பு முடிந்ததாக த்ரிஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.
லைகா தயாரிப்பில் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுத ‘ராங்கி’ எனும் படத்தில் இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் அடுத்த வாரம் டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார்.

2019இல் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. தற்போது காலம் தாழ்ந்து டிச.30இல் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
Related Article
யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
வாரிசு படத்தினையும் வெளியிடும் உதயநிதி!
‘மாரி’ படத்தின் இயக்குநருக்கு ரகசிய திருமணம்?
இன்ஸ்டாகிராமில் ‘ரஞ்சிதமே’ பாடலின் சாதனை!
நயன்தாரா படத்திற்காக பிரபல பாடகரும், அவர் மகளும் பாடிய பாடல்!
காவலர் முணுமுணுக்கும் ‘ஜெய் பீம்’ பாடல்: இசையமைப்பாளர் நெகிழ்ச்சி ட்வீட்
மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது: தயாரிப்பாளர் தில் ராஜூ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



