
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், ரஜிஷா விஜயன், எம்.எஸ். பாஸ்கர், குமாரவேல், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். சமூகத்தில் பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்தப்படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாரிசு படத்தினையும் வெளியிடும் உதயநிதி!
தற்போது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஜெய் பீம் படத்தில் வரும் ‘பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே..’ என்ற பாடலுக்கு காவலர் ஒருவர் மெய்மறந்து முணுமுணுக்கும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இது போதும்” என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் நெகிழ்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போதும் https://t.co/wIZWxgVMOQ
— Sean Roldan (@RSeanRoldan) December 16, 2022