தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

திருமணத்தின் பெயரில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசியதால், இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதனால், தமிழில் எந்தளவுக்கு அதன் வீரியம் மாறாமல் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

தீபாவளியை முன்னிட்டு படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.  தற்போது இந்தப் படம் டிச.29ஆம் நாள் வெளியாக உள்ளது. சக்தி ப்ளிம் பேக்டரி தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com