சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவ்னி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. நடிகை பாவ்னி, 3-ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார் பாவ்னி. அவர் கூறியதாவது:
குறைவான அறிகுறிகளுடன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்கிறேன். விரைவில் நலம் பெறுவேன் என்று கூறியுள்ளார்.