
கவின் நடித்துவரும் டாடா படத்தின் முதல் பாடல் தந்தையர் தினத்தை முன்னிட்டு வருகிற 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
தொடர்ந்து அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் ஊர் குருவி என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ''நெல்சன் வெறில இருக்காரு...'' - ரஜினிகாந்த் படம் குறித்து அப்டேட் சொன்ன பிரபல நடிகர்
இந்த நிலையில் தற்போது டாடா என்ற படத்தில் கவின் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கணேஷ் கே பாபு இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...