
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநருமான ரமேஷ் குடவாலா இடம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.2.90 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சூரியின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தக்கோரி உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' பட முக்கிய காட்சி யூடியூபில் வெளியானது
இதன் ஒரு பகுதியாக நடிகர் சூரியிடம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக இந்த விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







