மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கேஜிஎஃப் 2: இயக்குநர் ஷங்கர் புகழாரம்

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :17 மே 2022, 7:01 am

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்ற கேஜிஎஃப் 2, தற்போது ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் ரூ. 900 கோடிக்கு அதிகமாகவும் உலக அளவில் ரூ. 1170 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தைப் பார்த்தப் பிரபல இயக்குநர் ஷங்கர், படத்தை மிகவும் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஒருவழியாக கேஜிஎஃப் 2 பார்த்துவிட்டேன். கதை சொல்லும் முறை, திரைக்கதை, படத்தொகுப்பு ஆகியவற்றில் நவீன உத்தி கையாளப்பட்டுள்ளது. வசனம், சண்டைக்காட்சிகளில் இண்டர்கட் ஷாட்டை (ஒரே நேரத்தில் இரு இடங்களில் நடக்கும் காட்சியைக் காண்பிப்பது) பயன்படுத்தியிருப்பது துணிச்சலான முடிவு. இது அற்புதமாக வந்துள்ளது. பலம்பொருந்திய யஷ்ஷுக்காக மாஸ் காட்சிகளுக்கான நடைமுறையை மாற்றியுள்ளீர்கள். பிரஷாந்த் நீலுக்கு நன்றி. அன்பறிவின் சண்டைக்காட்சிகள் அபாரம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.