
2014இல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மும்பையை சேர்ந்த நடிகை ஆஷ்னா ஜவேரி. சமீபத்தில் அவரது கன்னித்தீவு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. கடைசியாக 2018இல் அவரது படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அடுத்து கலையரசன், ஆனந்தியுடன் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது விஜய் டிவி புகழ் மகாபா ஆனந்த், ஆர்ஜே விஜய் உடன் இவர் நடனமாடிய உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது.
பி ரெடி பிளிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் அனிவீ. நடனம்- சேண்டி மாஸ்டர்.