பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் பிக்பாஸில் இருக்கும் ரச்சிதாவுக்கு அவரது கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களிடைேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் துவக்க விழா கடந்த ஞாயிறன்று (அக்டோபர் 9) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனக்கே உரிய பாணியில் வரவேற்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குநர் மெட்டி ஒலி புகழ் சாந்தி, சன் டிவி தொகுப்பாளர் கதிரவன், நடன இயக்குநர் ராபர்ட், பாடகர் தினேஷ் கனகரத்தினம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், சின்னத்திரை நடிகை ரச்திதா மகாலட்சுமி, தொகுப்பாளர் மகேஸ்வரி, நகைச்சுவை நடிகர் அமுதவாணன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, சின்னத்திரை நடிகர் அஷீம், சின்னத்திரை நடிகை ஆயிஷா, திருநங்கை ஷிவின் கணேசன், நடிகை குயின்சி, இலங்கைை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி உள்ளிட்டோர் போட்டியாளர் கல்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஏன் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை - நடிகை திரிஷா பதில்
இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதா மகாலட்சுமிக்கு அவரது கணவரும் நடிகருமான தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். ரசிகர்களின் இதயங்களை வெல்ல வேண்டும்'' என வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


