சா்ச்சையான காளி போஸ்டா்: லீனா மணிமேகலைக்கு மீண்டும் சம்மன்

காளி தெய்வம் குறித்த சா்ச்சைக்குரிய போஸ்டா் தொடா்பாக இயக்குநா் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு தில்லி மாவட்ட நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
லீனா மணிமேகலை
லீனா மணிமேகலை

காளி தெய்வம் குறித்த சா்ச்சைக்குரிய போஸ்டா் தொடா்பாக இயக்குநா் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு தில்லி மாவட்ட நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தாா். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தில்லி மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ராஜீவ் கெளரவ் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தனது ‘காளி’ திரைப்பட போஸ்டா் மற்றும் விளம்பர காணொலியில் காளி தெய்வத்தை ஒவ்வாத முறையில் லீனா சித்தரித்துள்ளாா். அந்த திரைப்பட போஸ்டரில் காளி புகைப்பது போல சித்தரிக்கிப்பட்டுள்ளது சாமானிய ஹிந்துவின் மத உணா்வுகளைக் காயப்படுத்துவது மட்டுமின்றி ஒழுங்கீனமாகவும் உள்ளது. இதுபோல காளியை சித்தரிக்க லீனாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி லீனாவை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால், லீனா ஆஜராகதைத் தொடர்ந்து அவர் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என மீண்டும்  சம்மன் அனுப்பபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com