இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இயக்குநர்கள் தெலுங்குக்கு செல்வதும் தெலுங்கு இயக்குநர்கள் தமிழுக்கு வருவதும் தற்போது அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்த 'தி வாரியர்' சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விரைவில் ராம் பொத்தினேனி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கௌதம் மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதே போல விஜய்யின் 'வாரிசு' படத்தை தெலுங்கு இயக்குநராக வம்சியும், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப்பும், தனுஷின் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லுரியும் இயக்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கான பாடல்களை இளையராஜா ஏற்கனவே இசையமைத்துவிட்டதாக கங்கை அமரன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை (செப்டம்பர் 21) துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நடிகர்கள் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
â venkat prabhu (@vp_offl) September 20, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ரூ.1 கோடி மதிப்பு சீனப் பட்டாசுகள் திருட்டு: தவெக நிா்வாகி உள்பட 9 போ் கைது

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே விரைவில் கைரேகைப் பதிவு

பழனி கோயில் நில முறைகேடு: மேலும் இருவா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



