ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாஸ் லுக்கில் லெஜண்ட் சரவணன்!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான சரவணன் அருளின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

News image
Updated On :24 ஏப்ரல் 2023, 9:29 am

DIN

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான சரவணன் அருளின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடந்து, அடுத்த படத்தில் நடிப்பதற்கான கதையை தேர்ந்தெடுக்கும் பணியில் சரவணன் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. சமீபத்தில் காஷ்மீரில் இருந்து வெளியிட்ட புகைப்படம் உள்ளிட்டவை இணையத்தில் பேசு பொருளானது.

இந்நிலையில், திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த சரவணன் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். புது மணமக்களை வாழ்த்திய தருணம் எனக் குறிப்பிட்டு காணொலியும், சில புகைப்படங்களையும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Story image

லெஜண்ட் சரவணனின் புதிய தோற்றம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.