தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தனி ஒருவன் 2: அதிகாரபூர்வ அறிவிப்பு! (விடியோ)

இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படம் குறித்த அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 2:22 pm

DIN

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இன்றுடன் தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது. 

Story image

இயக்குநர் மோகன்ராஜா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “3வது முறையாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துடனும் 4வது முறையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடனும் 7வது முறையாக ஜெயம் ரவியுடனும் என்னுடைய 11வது படமாக தனி ஒருவன் 2 படத்தில் இணைந்துள்ளதை பெருமையாக அறிவிக்கிறேன். ரசிகர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

2024இல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.