ரஜினி - 170 கன்னியாகுமரியில் படப்பிடிப்பு?

ரஜினி - 170 கன்னியாகுமரியில் படப்பிடிப்பு?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘ரஜினி 170’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர்  உலகளவில் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக,  ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.  

மேலும், இதில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் பாசிலும்  முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் நடிகை துஷாரா விஜயனும் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com