தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அஜித்துக்கு வில்லனாகும் சஞ்சய் தத்?

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 10:10 am

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இதனால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டதுடன் இப்படம் கைவிடப்படுவதாக சினிமா வட்டாரங்களில் பேசிவந்தனர்.

ஆனால், சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்பதால் இனி தாமதமாகாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த கேஜிஎஃப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, லியோ படத்தில் நடித்துள்ளார். தற்போது, அஜித்துடன் இணையும் தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.