மிஸ்டர் மனைவி தொடரில் இணையும் ரோஜா நடிகை!

ரோஜா தொடரில் அழுத்தமான துணை பாத்திரத்தில் ஸ்மிருதி காஷ்யப்  நடித்திருந்தார்.
மிஸ்டர் மனைவி தொடரில் இணையும் ரோஜா நடிகை!


மிஸ்டர் மனைவி தொடரில் நடிகை ஸ்மிருதி காஷ்யப் நடிக்கவுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர்.  

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும் வீட்டில் சமையல் செய்து குடும்பத்தைப் பேண நினைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும். 

இந்தத்  தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி அடைந்த செம்பருத்தி தொடரில் ஷபானா நடித்திருந்தார். அதன்மூலம் கிடைத்த பலதரப்பட்ட ரசிகர்களால் மிஸ்டர் மனைவி தொடருக்கும் ஏராளமான பார்வையாளர்கள் உண்டு. 

ஸ்மிருதி காஷ்யப்
ஸ்மிருதி காஷ்யப்

தற்போது மிஸ்டர் மனைவி தொடரில் நடிகை ஸ்மிருதி காஷ்யப் நடிக்கவுள்ளார். மிஸ்டர் மனைவி தொடரில் முக்கிய பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும், பலரைக் கவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையத் தொடர்களில் ஸ்மிருதி காஷ்யப்
இணையத் தொடர்களில் ஸ்மிருதி காஷ்யப்

ரோஜா தொடரில் அழுத்தமான துணை பாத்திரத்தில் ஸ்மிருதி காஷ்யப்  நடித்திருந்தார். மிஸ்டர் மனைவி தொடரில் கிடைத்த வாய்ப்புக்காக ஸ்மிருதிக்கு அவரின் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com