அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப். தன் நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரசிகர்களிடையே புகழடைந்தார். தற்போது, புஷ்பா - 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இளம் நடிகை ஒருவர் ஜெகதீஷ் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால், ஜெகதீஷ் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று(டிச.6) காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.
இதையும் படிக்க: கூஸ் முனிசாமி வீரப்பன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணுடன் ஜெகதீஷ் ‘லிவ் இன்’ உறவிலிருந்தார் என்றும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பின், அப்பெண் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் தந்தை அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தினம் தினம் திருநாளே: தினப்பலன்கள்!
தோல்விக்கும் தோள் கொடுப்போம்!

திண்ணிய நெஞ்சம் வேண்டும்!

தோல்விக்கும் தோள் கொடுப்போம்!
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

