மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

கண்ணகி படத்தில் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன்: கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் தான் மேக்கப் போடாமல் நடித்துள்ளதாக கூறியுள்ளார். 

Published On :

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து உள்ளனர். 

Story image

2019இல் தும்பா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் மலையாளத்தில் வரவேற்பு பெற்ற ஹெலன் படத்தினை தமிழில் ‘அன்பிற்கினியாழ்’ என ரீமேக் செய்தார். நாடகத்திலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய நான்கு நாயகிகளின் கதையை மையமாக வைத்து கண்ணகி படம் உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி பாண்டியனின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. 

Story image

நேர்காணலில் நடிகை கீர்த்தி பாண்டியன், “இந்தப் படத்தில் நான் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது. அதனால் இயக்குநரும் அதைதான் கேட்டார். எனது முகத்தினை மேக்கப் இல்லாமல் அனைத்து வகையான குறைகளுடனும் திரையில் காட்டியிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியே. 

Story image

இந்தப் படத்தில் எனது கதாபாத்திர பெரிதாக வசனங்கள் பேசாது. மௌனம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார். 

யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள கண்ணகி திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.