12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மீண்டும் தொடரில் நடிகை சுகன்யா!

நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சுகன்யா

Published On :

நடிகை சுகன்யா மீண்டும் சின்னத்திரை தொடரொன்றில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகன்யா, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான  ‘புது நெல்லு, புது நாத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின், 'சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். 

மலையாளத்தில் சில படங்களில் நாயகியாக சுகன்யா நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் டிஎன்ஏ என்கிற மலையாளப் படத்தில் தமிழ்ச் சூழல் கொண்ட பாடல் ஒன்றை சுகன்யா எழுதியிருந்தார்.

சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ஆனந்தம் தொடர் பெரிய வெற்றியடைந்தது. இத்தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். பின்னர், ஜன்னல் என்ற தொடரில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு வரை ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்ற இவர், 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார்.

நடிகை சுகன்யா புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீண்டும் தொடரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.