தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இணையத்தில் வைரலாகும் விஜய் 68 படத்தின் பெயர்!

விஜய் 68 படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2023, 8:55 am

DIN

விஜய் 68 படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே, விஜய் 68-வது திரைப்படத்துக்கு பாஸ்(Boss) என்று பெயரிட்டுள்ளதாக ஒருபுறமும், பஸ்ஸில்(puzzle) என்ற பெயரை வைத்துள்ளதாக மறுபுறமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

ரசிகர்களின் பதிவுகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பாஸ், பஸ்ஸில் எதுவும் இல்லை. விரைவில் உண்மையான பெயர் வெளியாகும் என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், விஜய்யின் 68-வது படத்தின் பெயர் கோட் (G.O.A.T (Greatest One Across Times)) என்று இணையத்தில் பரவி வருகிறது.

இதனிடையே, தயாரிப்பு நிறுவனம் விஜய் 68 படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.