/

புதிய வகை துப்பாக்கி: தயாரிப்பு விடியோவை வெளியிட்ட ‘கல்கி’ படக்குழு!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் கல்கி 2898 ஏடி படத்தின் புதிய விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :30 டிசம்பர் 2023, 7:39 am

DIN

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

Story image

இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில்  வெளியிட்டிருந்தனர். 

Story image

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல்ஹாசன், கல்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் படக்குழு புதிய விடியோவினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய வடிவிலான துப்பாகியை படக்குழு வடிவமைத்துள்ளது. அதன் தயாரிப்பு குறித்து இந்த விடியோ உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.