தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்! 

‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 10:13 am

DIN

‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே ஜவஹர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத். 

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த படம் யாருடன் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்தப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்தமான நடிகர் மாதவனுடன். பிரபலமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது” தெரிவித்துள்ளார்.

Story image

மித்ரன் அவர்களுடன் மின்னலே, தம்பி ஆகிய திரைப்படங்களின்  தயாரிப்பாளருடன் அடுத்த படத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சியென நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.