தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சின்னத்திரை நடிகர்களின் புதிய இணையத் தொடர் 'மாய தோட்டா'!!

இணையத்தொடரில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ், குமரன் தங்கராஜன், வைஷாலி தனிகா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Published On :


சின்னத்திரையில் கோலோச்சிய நடிகர்களின் நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகியுள்ளது. 

சின்னத்திரையில் நடித்துவரும் நடிகர்களில் பலர் வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், புகழ், ராமர், பிரியா பவானி சங்கர் போன்ற பலர் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். 

சமீபத்தில் வெளியாகிவரும் படங்களில் சின்னத்திரை முகங்களை வெள்ளித்திரையில் பார்க்க முடிகிறது. நாள்தோறும் இல்லங்களைத் தேடி வந்து சீரியல்கள் மூலம் மகிழ்விக்கும் சின்னத்திரை நடிகர்கள் அவ்வபோது வெள்ளித்திரைக்கு செல்வது ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தவகையில் சின்னத்திரையில் நடித்து வந்த நடிகர்கள் நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகியுள்ளது. ’மாய தோட்டா’ எனப் பெரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

Story image

இந்த இணையத்தொடரில் சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ், குமரன் தங்கராஜன், வைஷாலி தனிகா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சைத்ரா ரெட்டி வலிமை படத்திலும், குமரன் தங்கராஜன் வதந்தி தொடரிலும் நடித்துள்ளனர். எனினும் சின்னத்திரை நடிகர்கள் முதன்மை பாத்திரங்களில் இணையத்தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை. இதனால் இந்த இணையத்தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

சைத்ரா, குமரன் ஆகியோரின் ரசிகர்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.