
துணிவு படம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: ’வாரிசு’ எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் பதில்!
இந்நிலையில், துணிவு படத்தைக் கண்ட 'திரிஷா இல்லன்னா நயன்தாரா', 'ஏஏஏ' , 'மார்க் ஆண்டணி' ஆகிய படங்களின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘துணிவு பிளாக்பஸ்டர்.. அஜித் சார் என்ன ஒரு நடிப்பு! மைதானத்திற்கு வெளியே போகும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸர். மொத்தத்தில் தீ! இயக்குநர் வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.