திரைப்படங்களில் வெளிப்படும் சிறந்த திறமைகளைக் கொண்டாடும் விதமாக விமர்சகர்கள் சங்கத்தின் பங்களிப்பில் வருடந்தோறும் தி கிரிடிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 28-வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர் இரு முக்கிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். ஆர்ஆர்ஆர் படம் 2022 மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி.
இந்நிலையில் 28-வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடல் வென்றது. இதையடுத்து தற்போது மேலும் இரு சர்வதேச விருதுகளை ஆர்ஆர்ஆர் படம் வென்று அசத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

காமராஜரைப் போல மு.க.ஸ்டாலினும்... பிரகாஷ் ராஜ் கருத்து!

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


