118 நாள்களாக நடைபெற்ற தங்கலான் படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: வெளியானது கமல்ஹாசன் - 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...