தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஜோலுக்கு நன்றி கூறிய ரன்வீர் சிங்! காரணம் என்ன?

பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங். 

News image
Updated On :31 ஜூலை 2023, 11:25 am

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் பல படங்களை தயாரித்துள்ளார். 9 படங்களையும் இயக்கியுள்ளார். 

தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் 18, தர்மா புரடக்‌ஷன் இணைந்து வழங்கும் இந்தப் படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

தமிழில் சூர்யா ஜோதிக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையை போலவே பெண் வீட்டிற்கு செல்லும் ரன்வீர் சிங்கின் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

Story image

3 நாளில் ரூ.45.90 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவிட்துள்ளது. பல பிரபலங்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை கஜோல், “கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கரண் ஜோஹர் நீங்கள் மீண்டும் வந்து விட்டீர்கள்” எனப் பதிவிட்டு இருந்தார். அதற்கு ரன்வீர் சிங், “நன்றி மேடம். கரண் ஜோஹரின் வரலாற்று சிரப்புமிக்க ரொமான்ஸில் நானும் பங்கு கொண்டதற்கு பெருமையாக உள்ளதென” தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியுள்ளார். 

மேலும், பிரபல திரைக்ககதை ஆசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், “சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த கமர்சியல் ஹிந்திப்படம் இதுதான். உங்களுக்கு நகைச்சுவையும் அழுத்தமான எமோசன் காட்சிகளும் பிடிக்குமென்றால் இது முக்கியமாக பார்க்க வேண்டிய படமாகும்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.